நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

எம்மைப் பற்றி வரலாறு

வரலாறு

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் கீழான 2002 2009 ரையிலான காலப்பகுதி

பிரதான பகிரங்க நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்படுவதைத் தவிர்த்துக் கொண்டு அவற்றிற்குப் பதிலாகச் சுதந்திரமாகச் செயற்படுகின்ற அமைப்புக்களை எற்படுத்த வேண்டுமென்று பல சமூக அமைப்புக்கள் நீண்ட காலமாகக் கேட்டுவந்துள்ளன. இதன் பயனாக இலங்கைப் பாராளுமன்றம் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பிற்குப் பதினேழாவது திருத்தத்தை ஏகமனதாகப் பிரகடனப்படுத்தியது. அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தத்திற்கு அமைவாகத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு. 2001 ஆம் வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது. தகாத செல்வாக்குச் செலுத்துதல் தலையீடுகள் செய்தல் ஆகிய முறைகேடான செயற்பாடுகளிலிருந்து பொலிஸ் சேவையை விடுவித்தல் பொலிஸ் சேவையிலுள்ள அனைத்துத் தரங்களையும் சேர்ந்த அலுவலர்களும் சட்டவாட்சிக்கு மதிப்பளித்துப் பக்கசார்பற்ற விதத்திலும் அச்சமின்றியும் செயற்படுவதற்கு வழிவகுத்தலும் இந்த ஆணைக்குழு ஏற்படுத்தப்படுவதற்கு அடிப்படைக் காரணிகளாகும்

 

ஆணைக்குழுவின் தத்தவங்களும் பணிகளும்

I.       பொலிசுப் பேரதிபதி தவிர்ந்த பொலிஸ் அலுவலர்களின் நியமனம் பதவி உயர்வு இடமாற்றம் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் ஆகியவை தொடர்புடைய பணிகள் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளன. பதவி உயர்வு இடமாற்றம் ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பதவி நீக்கம் சம்பந்தப்பட்ட பணிகளை ஆணைக்குழு பொலிசுப் பேரதிபதியோடு கலந்தாலோசித்து நிறைவேற்றும் (உறுப்புரை 155 எ(1))

II.         எவரேனும் ஒரு பொலிஸ் அலுவலர் அல்லது பொலிஸ் சேவைக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள். மற்றும் இன்னலுக்குள்ளான ஆளெவரினதும் முறைப்பாடுகளை ஏற்று அவை தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் குறித்த நோக்கத்திற்காகப் பாராளுமன்றத்தினால் சட்டமாக்கப்பட்ட ஏதேனும் சட்டத்திற்கு இங்கியவாறு தோதான பரிகாரத்தை வழங்குவதற்கும் ஏற்றவகையில் நடவடிக்கை விதிமுறைகளை ஆணைக்குழு ஏற்படுத்திக் கொள்ளும் (உறுப்புரை 155 எ(2))

III.        பொலிஸ் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஆட்சர்ப்பு நடவடிக்கைத்திட்டம் அவர்களுக்கான பயிற்சி அளித்தல் பொலிஸ் சேவையின் வினைத்திறன் மற்றும் சுவாதீனத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கான அனைத்து விடயங்கள் குறித்தும் ஆணைக்குழு ஏற்பாடுகளை வழங்குவதுடன் அவை தொடர்புடைய தீர்மானங்களை எடுக்கும் தத்துவத்தையும் கொண்டிருக்கும். பதவி உயர்வுகள் வழங்குதல் மற்றும் இடமாற்றங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை சம்மந்தமாகப் பின்பற்றவேண்டிய நியமங்களையும் நடத்தை நெறிகளையும் தேவை அல்லது பொருத்தத்திற்கு ஏற்றவாறு காலத்துக்குக் காலம் ஆணைக்குழு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயற்படும் (உறுப்புரை 155 எ (3))

சேவையாற்றியுள்ள செயலாளர்கள்

திரு எஸ் டி பியதாச (2003.01.27 தொடக்கம் 2003.07..30 வரையிலும்)
திரு பந்துல விஜயரத்ன (2003.08.01 தொடக்கம் 2004.09.09 வரையிலும்)
திரு கே சி லோகேஸ்வரன் (2004.09.10 தொடக்கம் 2010.03.04 வரையிலும்)
திரு என் ஆரியதாச குரே (2010.03.08 தொடக்கம் 2011.10.19 வரையிலும் பதில் கடமையில்)
திரு ஏ குலதுங்க (2011.11.08 தொடக்கம் 2012.04.22 வரையிலும் பதில் கடமையில்)
திரு டி.எம்.கே.பி தென்னக்கூன் (2012.04.23 தொடக்கம் இதுவரையிலும்)

 

 

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது