நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்

முறைப்பாடுகள்

பொதுமக்களின் முறைப்பாடுகள்

பொலிஸ் அலுவலர்;கள் அல்லது பொலிஸ் படை அணிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்று அவை தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நம்பிக்கையுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்குத் தத்துவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் அலுவலர்கள் அல்லது பொலிஸ் படை அணியினால் செய்யப்பட்ட ஒரு செயல் அல்லது செய்யாமல் விடப்பட்டமை காரணமாக இன்னலுற்றவா;களான பொதுமக்கள் முறைப்பாடுகளைச் செய்யலாம்.

மனித உரிமைகள் மீறப்படுதல் சித்திரவதை மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை ஊறு விளைவித்தல் பொலிஸ் கட்டுக்காப்பில் இருக்கும்போது இறப்பு ஏற்படுதல் வழக்குகளைகப் புனைந்து நீதிமன்றத்திற்குப் பொய்யான அறிக்கைகளைச் சமா;ப்பித்தல் தலையீடுகள் செய்தல் மிரட்டுதல் அச்சுறுத்தல் அதிகரித்த அதிகாரத் துர்ப்பிரயோகம் கடமைகளைப் புறக்கணித்தல் சட்ட விரோதமாகக் கைதுசெய்தல் தடுத்துவைத்தல் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு மறுத்தல் தவறுதல் அல்லது தாமதித்தல் கடமைகளை நிறைவு செய்யத் தவறுதல் பக்கசார்பாக இருத்தல் புண்படுத்தக் கூடிய சொற்பிரயோகம் மற்றும் செயலற்றிருத்தல் போன்ற இன்னல்கள் தொடர்பாகப் பொலிஸ் அலுவலர்களுக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்ய முடயும்.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இணைந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தகவல் பிரிவு உருவாக்கப்பட்டது