வணக்கம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு

பொலிஸ் சேவை : பொதுமக்களின் எதிர்பார்ப்பு

2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் சட்டத்தினை அமுல்படுத்தல்,பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குதல் இலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றினைத் தடுத்தல் ஆகிய பொதுமக்களுக்கு முக்கியத்துவம் பெறும் பிரதான துறைகளை கண்காணிப்பு செய்வதற்காக மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களைத் தாபிப்பதற்கான பொதுமக்களின் கோரிக்கை மிகவும் வலுவானதாக எழுந்தது. நிறுவனங்களுக்குரிய பரிந்துரைகளை நிர்வாக மயப்படுத்தல், நாட்டில் சட்டவாட்சியை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சியினை மேம்படுத்தல் ஆகிய பிரதான நோக்கங்களுடன் சுயாதீன ஆணைக்குழுவினைத் தாபிப்பதற்காக 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் வழி பிறந்தது. அதற்கமைய மிகவும் நட்புறவுடனான பொலிஸ் சேவை ஒன்றிற்காக அதிகரித்துச் செல்லும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. பொலிஸ் சேவையின் திசையமைப்பில் ஏதேனுமோர் மாற்றத்தின் தேவையும் அதன் மூலம் வலியுறுத்துப்பட்டது.

19 ஆவது திருத்தத்தின் மூலம் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு,

  • – பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்தல், பதவி உயர்வு வழங்கல், இடமாற்றம் செய்தல், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் செய்தல்,
  • – பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் சேவைக்கும் எதிராக முன்வைக்கப்படும் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பொறுப்பேற்று அவற்றினை விசாரணை செய்து சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை வழங்குதல் மற்றும்,
  • – பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பதவியுயர்வு வழங்கும் மற்றும் இடமாற்றம் செய்யும் நடைமுறைகளைத் தயாரித்தல், பொலிஸ் சேவையின் வினைத்திறன் மற்றும் சுயாதீன தன்மை என்பவற்றினை விருத்தி செய்தல் மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்குரிய கட்டமைப்புக்கள் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் என்பவற்றினை நடைமுறைப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படும்.​

ஆணைக்குழுவின் சட்ட ரீதியான அதிகாரங்கள் மற்றும் பணிகள்

அரசியலமைப்புச் சட்டத்தின் 155 ஆவது பிரிவில் ஆணைக்குழுவின் அதிகாரம் மற்றும் பணிகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

155எ. (1) (அ) பொலிஸ் மா அதிபர் தவிர்ந்த வேறு பொலிஸ் அலுவலர்களின் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் என்பன ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்படுதல் வேண்டும். ஆணைக்குழு பொலிஸ் மா அதிபர் உடனான கலந்தாலோசனையுடன் பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் தொடர்பில் அதன் தத்துவங்களைப் பிரயோகித்தல் வேண்டும்.

(ஆ) ஆணைக்குழுவானது இவ்வுறுப்புரையின் கீழ் அதன் தத்துவங்களைப் பிரயோகிக்கையில், அரசியலமைப்பின் XVII (அ) அத்தியாயத்தின் கீழ் தாபிக்கப்பட்ட மாகாண பொலிஸ் சேவை ஆணைக்குழுக்கள் தாபிக்கப்படும் போதிலெல்லாம், அத்தகைய ஆணைக்குழுக்களின் குறித்தொதுக்கப்பட்ட தத்துவங்களையும் பணிகளையும் மதிப்புக் குறைத்தல் ஆகாது.

155 எ. (2) ஆணைக்குழுவானது, பொலிஸ் அலுவலர் ஒருவருக்கு அல்லது பொலிஸ் சேவைக்கு எதிராகச் செய்யப்படும் பொதுமக்களின் முறைப்பாடுகளையும் எவரேனும் இன்னலுற்ற ஆளின் முறைப்பாடுகளையும் ஏற்றுக் கவனிப்பதற்கும், புலனாய்வு செய்வதற்குமான நடவடிக்கை முறைகளைத் தாபித்தல் வேண்டுமென்பதுடன், பாராளுமன்ற சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவாறான நிவாரணத்தை ஏற்பாடு செய்தலும் வேண்டும். ஆணைக்குழு நிவாரணத்தை வழங்கும் பட்சத்தில், ஆணைக்குழுவானது பொலிஸ் மா அதிபருக்கு உடனடியாக அறிவித்தல் வேண்டும்.

155 எ. (3) ஆணைக்குழுவினால், பொலிஸ் மா அதிபரிடம் உசாவி – (அ) ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பிலான திட்டங்களை, அவை தொடர்பில் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட கொள்கைக்கு அமைவாக வகுத்தமைத்தல் (ஆ) பயிற்சியளித்தல் மற்றும் பொலிஸ் சேவையின் வினைத்திறனையும் மற்றும் சுதந்திரத்தையும் மேம்படுத்தல் (இ) தேசியப் பிரிவினதும் மாகாண பிரிவுகளினதும் பயன்பாட்டுக்கு அவசியமான ஆயுதங்கள், வெடிமருந்துகள், மற்றும் வேறு உபகரணஙகள் ஆகியவற்றின் தன்மையும் வகையும் அத்துடன் (ஈ) நடத்தை பற்றிய கோவைகள் மற்றும்

ஒழுக்காற்று நடவடிக்கைமுறைகள். உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான சகல விடயங்களுக்குமான விநியோகங்கள் மற்றும் தீர்மானித்தல் என்பவற்றை மேற்கொள்ளல் வேண்டும்.

ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை

அரசியலமைப்புச் சட்டத்தின் 155 இ பிரிவு

126 ஆவது உறுப்புரையின் மற்றும் 155 ஓ உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய இவ்வத்தியாயத்தின் கீழ் அல்லது ஏதேனும் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கு குறித்தொதுக்கப்பட்ட அல்லது ஒரு குழுவிடம் அல்லது  அரச உத்தியோகத்தர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏதேனும் பணிகளைப் புரிவதன் பயனாக ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளையை அல்லது முடிபை விசாரணை செய்வதற்கான, வெளிப் படுத்துவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்து வதற்கான எத்தகையதுமான தத்துவத்தை  அல்லது நியாயாதிக்கத்தை எந்த நீதிமன்றமோ நியாயசபையோ கொண்டிருத்தலாகாது

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் முறையற்ற விதத்தில் தலையீடு செய்தல்

அரசியலமைப்புச் சட்டத்தின் 155 ஊ (1)  பிரிவு

ஆணைக்குழுவின், அதன் எவரேனும் உறுப்பினரின் அல்லது அதன் ஏதேனும் குழு ஒன்றின் மேற்படி அத்தியாயத்தின் கீழ் ஆணைக்குழுவினால் அவ்வாறு அதிகாரம் கையளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரின் ஏதேனும் முடிபில், அவரது கடமையின்போது தவிர, நேரடியாக அல்லது மறைமுகமாக, தானாக அல்லது எவரேனும் வேறு ஆளினூடாக, எத்தன்மைத்தான ஏதேனும் முறையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அல்லது செல்வாக்குச் செலுத்த எத்தனிக்கின்ற  அல்லது முறையற்ற விதத்தில் தலையீடு செய்கின்ற ஆளொருவர் தவறொன்றுக்கு குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன், குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட தன்மீது ஒரு இலட்சம் ரூபாவை விஞ்சாத குற்றப் பணமொன்றுக்கு அல்லது ஏழு ஆண்டுகளை விஞ்சாதவொரு காலப்பகுதியொன்றுக்கான மறியல் தண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மற்றும் மறியல் தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதலும் வேண்டும்.

தவிசாளரின் செய்தி

பாதுகாப்பு என்பது பொதுமக்களின் உரிமையாகும். பாதுகாப்பு மற்றும் சமாதானம் என்பன அவர்களுக்கு உன்னதமானவை. பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமாதானத்தினை நிலைநாட்டி பேணுவதற்கும் ஸ்தீரத்தன்மையையும் பொதுமக்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதற்கும் அரசினால் தாபிக்கப்பட்டுள்ள மிகவும் முன்னனியான பொறிமுறை பொலிஸ் சேவை ஆகும். இதன் பணிகளை நிறைவேற்றுவதற்காக பொலிஸ்- அதிகாரத்தினை – பயன்படுத்தகின்றது. சனநாயக நாடு ஒன்றில் இவ்வாறான அதிகாரம் ஒன்றினைப் பயன்படுத்துவதற்கான ஆற்றல்களின் ஊடாக பொலிஸ் என்பது சிறந்த மற்றும் கூருணர்வுடைய நிறுவனம் ஒன்று என்ற நிலையினை அடையும். இதன் காரணமாக தனது அதிகாரத்தினை பக்கச் சார்பின்றி செயற்படுத்தி பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதாக பொறுப்புக் கூறுவதற்கு போதியளவு மேற்பார்வை அதிகாரத்துடனான பொறிமுறை ஒன்று அவசியமாகும்.

பொலிஸ் சேவையினைக் மேற்பார்வை செய்யும் மற்றும் அதன் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் பணியின் ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் உத்தியோகத்தர்களின் அதி உயர் தொழில்சார் தரத்திலான சிறந்த சேவை மூலம் பொதுமக்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை ஒன்றினைக் கழிக்கும் உரித்தினை பாதுகாத்துக் கொடுக்க அர்ப்பணித்துள்ளது. பொறுப்புக் கூறும் செயற்பாடு, தாம் பணி புரியும் பொதுமக்களுக்கு பதிலளித்து அரசின் நம்பிக்கையினை உறுதிப்படுத்தி தனது உச்சளவிலான உள்ளார்ந்த சக்திகளுடனான செயலாற்றுகையானது பொலிஸ் உத்தியோகத்தர்களின் மற்றும் பொலிஸின் வினைத்திறனினை மதிப்பிடுவதற்கு துணையாக அமையும்.

தன்னிடமிருந்து எதிர்பார்க்கும் பணியினை உச்ச அளவில் நிறைவேற்றுவதனையும் அவ்வாறு நிறைவேற்றத் தவறுமிடத்து பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்தும் உள்ளக மற்றும் வெளிவாரியான பாதுகாப்பு மற்றும் சமநிலையான வழிமுறை ஒன்று பொலிஸ் சேவையின் பொறுப்புக்கூறல் எனக் கருதப்படும். ஆணைக்குழுவானது மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொலிஸ் சேவையின் மனித வள முகாமைத்துவம் மற்றும் பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் வழிமுறை மற்றும் சட்ட ரீதியான பணிகள் என்பவற்றின் மூலம் முயற்சி செய்கின்றது. பொலிஸ் அலுவலர்கள் அதிகாரத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலமும்  பொலிஸார் மீதான அரசியல் பீடங்களின் முறையற்ற தலையீடுகளை தவிர்க்கும் பொருட்டும் பொலிஸின் சட்டரீதியான தன்மையினை விருத்தி செய்வதன் மூலமும் பொதுமக்களின் நம்பிக்கையினை விருத்தி செய்வதன் ஊடாக மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

சட்டதரணி பி.எச்.மனதுங்க
தலைவர்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு.

தற்போதைய ஆணைக்குழுவின் தவிசாளர்,உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்

ஆரம்பக் கல்வி கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிஇ இரசாயனப் பகுப்பாய்வாளர்...
கொழும்பு பல்கலைக்கழக புகழ்பெற்ற பேராசிரியர். அவூஸ்திரேலிய RMIT...
இலங்கை விமன் இன் நீட் (Women in Need) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர். பெண்களின் ...
திரு. பீ.ஏ.ஜெயநாதன்
உறுப்பினர்
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர். 20 வருடங்கள் பொலிஸ் திணைக்களத்தின்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். சர்வதேச வரலாறு பற்றிய ...
அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் (இயற்கையியல்) பற்றிய BSc. பட்டதாரியாவார்....
BA (சிறப்பு)இ LLB, PhD (ஸ்ரீ ஜயவர்தனபுர) ஐக்கிய இராச்சியம் Bram shill Staff College இல் பட்டதாரி...
இலங்கை நிர்வாக சேவை (தரம் 1)இ அரசாங்க நிர்வாகம் பற்றிய விஞ்ஞானமானிப் பட்டதாரிஇ ....